LocalNorth

யாழில் மகளிர் அமைப்புக்களுடன் ஒஸ்லோ பிரதி மேயர் சந்திப்பு!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் யாழ்ப்பாணத்தில் நேற்று மகளிர் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டன. இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading