Local

யானை தாக்கி பாகன் மரணம்! – பல வீடுகள் சேதம்

கரன்தெனிய பகுதியில் இடம்பெற்ற பெரஹரவில் யானை தாக்கியதில் பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரிதீகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யானை அப்பகுதியில் இருந்த பல வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது.

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் மிருக வைத்தியர்கள் ஒன்றிணைந்து குறித்த யானையைப் பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading