World

‘போர் விமானத்திலிருந்து தாக்குதல்’ – இந்தியாவை மிரட்டும் வகையில் பாகிஸ்தான் சோதனை!

போர் விமானத்தில் இருந்து தாக்குதல் சோதனையை பாகிஸ்தான் விமானப்படை நடத்தி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை நேற்று ஜே.எப்-17 போர் விமானத்தில் இருந்து நவீன ஆயுதம் மூலம் துல்லியமான தாக்குதல் நடத்தி சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த நவீன ஆயுதம் பாகிஸ்தான் என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

இது பகல் மற்றும் இரவு நேரத்திலும் பலவகையான இலக்குகளை குறிதவறாமல் தாக்க வல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. ஜே.எப்-17 போர் விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. அதேசமயம் தாக்குதல் குறித்த சரியான தொழில்நுட்ப விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading