Local

18 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம் – மஹிந்த அணியும் பங்கேற்கும்!

நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி , உயர்நீதிமன்ற தீர்ப்புகளையடுத்து இன்னும் 48 மணிநேரத்துக்குள் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்குரிய அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பு முடிவடைந்தபின்னர், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஜனாதிபதியால் விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அதேவேளை, புதிய அரசு அமையபெற்ற பின்னர்  – 18 ஆம் திகதி கூடும் சபை அமர்வில் மஹிந்த அணி பங்கேற்கவுள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற சபை அமர்வுகளை மைத்திரி, மஹிந்த கூட்டணி உறுப்பினர்கள் புறக்கணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading