Local

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை கலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாளை (18) பிற்பகல் ஒருமணிக்கு கூடவுள்ள நிலையில், சபை நடவடிக்கைகள் சம்பந்தமாகவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும் என தெரியவருகின்றது.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு கூட்டுஎதிரணி விடுத்துள்ள கோரிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading