Local

அரசமைப்பைக் காக்கும் போராட்டத்தில் வெற்றி! – ரிஷாத் பெருமிதம்; ரணிலுக்கு வாழ்த்து

“நாட்டின் அரசமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டோம். அதில் இன்று வெற்றி கண்டுள்ளோம்.”

– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இதன்போது ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது என்ற காரணத்தினாலேயே அதற்கெதிராக இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். புதிய பிரதமருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading