Local

பரபரப்புக்கு மத்தியில் செய்வாய் கூடுகிறது நாடாளுமன்றம் !’அடிதடி’ அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22), சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்த அறிக்கை சபாநாயகர் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

குறித்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மீதும் குறித்த அறிக்கையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் அறிக்கையே கையளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading