Local

கொள்ளுப்பிட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோல்பேஸ் கேட் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டில் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதுருகிரிய, அரங்கல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேனக ஶ்ரீலால் ஜயசிங்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading