Local

அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை மறுதினம் (23) செவ்வாய்க்கிழமை அவசரமாகக் கூடவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பங்கேற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
பட்ஜட் கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து, மே மாதம் 7 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடவிருந்தது.
எனினும், நாட்டில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காகவே அவசரமாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading