Local

தூக்குத் தண்டனை விவகாரம்: ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அநுராதபுரம் மக்கள் பேராதரவு! – மைத்திரியின் ஊடகப்பிரிவு அறிக்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை விதிப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு அநுராதபுர மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.

அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் இடம்பெறும் ‘என்டபிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் விசேட கண்காட்சி கூடத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்து அறியப்பட்டு வருகின்றது. கருத்துத் தெரிவித்த மக்களில் 95 வீதமானவர்கள் ஜனாதிபதியின் முடிவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading