Lead NewsLocal

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்! – கோட்டா பங்கேற்கவில்லை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடைக்கு நேற்று அழைக்கப்பட்டார்கள்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று மாலை ‘மக்கள் மேடை’ நிகழ்வு நடைபெற்றது. மார்ச் 12 அமைப்பு, பெப்ரல் அமைப்பு மற்றும் எவ்ரில் இளைஞர் வலையமைப்பு ஆகியன இணைந்து மக்கள் மேடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

ஒரே மேடையில் இருந்து கொள்கை ரீதியான விவாதத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். எனினும், கோட்டாபய ராஜபக்ச இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.

சஜித்தும் அநுரகுமாரவும் தமது கொள்கை விளக்கங்களை ‘மக்கள் மேடை’யில் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading