EastLocal

நிரந்தர அரசியல் தீர்வுதான் தமிழருக்கு முதல் முக்கியம்! – ஸ்ரீநேசன் எம்.பி. வலியுறுத்து

“தமிழ் மக்களுக்கு முதலில் நிரந்தர அரசியல் தீர்வே முக்கியமான தேவைப்படாக உள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயம்.

அத்துடன், சம்பளத்தை அதிகரிப்பதிலும் பார்க்கப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைக் கட்டுப்பாட்டுக்கான மூலோபாயங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading