“Pickme”மற்றும் “Uber” வருகைக்கு எதிர்ப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள “Pick-me” மற்றும் “Uber” டாக்ஸி சேவைகள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சங்கங்களின் சாரதிகள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்ளே மூன்று டாக்ஸி சங்கங்களின் கீழ் சுமார் 1,400 பதிவு செய்யப்பட்ட டாக்சிகள் உள்ளன.
இந்த சங்கங்கள் 1980 ஆம் ஆண்டு முதல் கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன.
