Local

பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்த திட்டம்!

இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இனவாத கருத்துக்களை கொண்ட மொஹமட் காசிம் சஹரானினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் ஒரு கட்டமாகவே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

குறித்து நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குப்பு பள்ளிவாசல் என்றழைக்கப்படும் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயிர் நீத்த இஸ்லாமிய தலைவர்களை நினைவு கூறும் வகையிலான இந்த பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் போலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலிம், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading