Cinema

ரஜினியின் மகளின் திருமண நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்தனர்.

சௌந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்துப் பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார்.

எதிர்வரும் 10,11ஆம் திகதிகளில் திகதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கின்றது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி அன்று எங்களது மகள் சௌந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெறவுள்ளதால் இந்தக் கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில் பெப்ரவரி 10ஆம் திகதி மதியம் 3.10 வரை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், 12ஆம் திகதி வரவேற்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading