Local

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் பைசர்!

முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார்.


இவர், மத்திய கொழும்பு தொகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள், வேட்பாட்டாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றார்.

இதுதவிர, எதிர்வரும் காலங்களில் மக்கள் சந்திப்புக்களையும் பரந்தளவில் நடத்தத்
திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மேற்குத் தொகுதி அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான மாநகர எதிர்க்கட்சித் தலைவர் எச்.எம். மன்ஸில், கொழுப்பு மாநகர சபை உறுப்பினர் துஷார ஹேமந்த (மஞ்சு) ஆகியோரின் ஒத்துழைப்புடன் இச்சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.

ஒக்டோபர்  மாத அரசியல் சூழ்ச்சியின் பின்னர்,  பைசர் முஸ்தப்பாவின் அரசியல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading