EastLocal

சம்மாந்துறையில் பொசன் நிகழ்வு!

 

 

 

 

இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுரா இணைந்து ஏற்பாடு செய்த பொசன் பண்டிகை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும் மற்றும் பிரயோக விஞ்ஞானபீடத்திலும் இன்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்றன.

இதில் கல்முனை விகாரையின் விகாராதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாத், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயிலின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி யூ.எல்.எம்.சமீம், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அஸார், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் எம்.கே.எம்.முஸ்தபா, மஜ்லிஸ் அஷ்ஷுரா சபை தவிசாளர் ஐ.ஏ. ஜப்பார் உட்பட முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொசன் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ‘தன்சல’ தானம் வழங்கலும் இதன்போது இடம்பெற்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading