Local

புட்டினுடன் மைத்திரி 20 நிமிடங்கள் பேச்சு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று 20 நிமிட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச் செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தகத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

மேலும், மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading