LocalSports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற போட்டியில் 2 இற்கு 0 என்ற வகையில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கும் முதலாவது ஆசிய நாடாக இலங்கை தெரிவாகி இருப்பதையிட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துள்ள இந்த முக்கியமான அடைவு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட அணி வீரர்களுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து தாய்நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading