Local

பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலவேண்டாம்! – மஹிந்த அணிக்கு வெல்கம சாட்டையடி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியானதொரு முடிவை எடுக்காமல் இருப்பதே இப்போதைய நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் காரணம்.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. தேர்தல் ஒன்று வந்தாலே அதனை செய்து விடலாம்.

பெரும்பான்மைப் பலமில்லாமல் பலாத்காரமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஒருபோதும் நான் ஆதரிக்கமாட்டேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading