World

QR Code அட்டையை வைத்து யாசகம் எடுக்கும் வயோதிபர்!

தமிழகத்தின் கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் யாசகம் எடுத்து வருகிறார்.

யாராவது சில்லறை இல்லை என்றால் “அக்கவுண்டில் போடு” என ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை காட்டுகிறார்.

இதனைக் கண்ட மக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர், தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர், தான் 3 வங்கி ஏ.ரி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாகவும், ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதாகவும், இதனால் ‘டிஜிட்டல்’ முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading