Local

சம்பந்தன் ‘IN’ – டக்ளஸ் ‘OUT’! மஹிந்த – ரணில் இணக்கம்!!

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்பு சபையில் இரா.சம்பந்தன் இடம்பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினரானார்.

இதனால் சம்பந்தன் அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்புச் சபை உறுப்பினராக அவரால் நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்ச, அரசியலமைப்பு சபையில் இருந்து விலகியுள்ளார்.

இவரது இடத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணைந்தே, புதிய உறுப்பினரை நியமிக்க வேண்டும்.

இந்த நிலையில், இந்த வெற்றிடத்துக்கு டக்ளஸ் தேவானந்தாவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, சபாநாயகரிடம் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் பிரதமருடன் இணைந்தே பரிந்துரையை முன்வைக்க வேண்டும் என்று கூறி அதனை சபாநாயகர் கரு ஜெயசூரிய நிராகரித்து விட்டார்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி, இரா.சம்பந்தனின் பெயரை முன்மொழிவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading