Local

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யலாம்!

நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் (குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில்) தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, மற்றும் வடமேல் மாகாண கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading