Local

ராஜிதவிடம் மீண்டும் சுகாதார அமைச்சைச் கொடுக்காதீர்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவத் துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களாக சுகாதார அமைச்சராக ராஜித இருந்த காலப்பகுதியில் சுகாதாரத்துறை முற்றாக சீர்குலைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆகவே, மீண்டும் ராஜிதவிடம் குறித்த பதவியை கையளித்தால் மருத்துவத் துறையின் நிலைமை கேள்விக்குறிய ஒன்றாக மாறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சையோ அல்லது வேறு எந்த அமைச்சுப் பொறுப்புக்களையோ வழங்கக் கூடாதென அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் வலியுறுத்தி போராட்டமொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading