Lead NewsLocal

ரணிலையும் சந்தித்தார் புதிய தளபதி சவேந்திர!

இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.

அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சம்பிரதாயத்தின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்திருந்தார். அதையடுத்து இன்று பிரதமரையும் அவர் சந்தித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியால் பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading