Local

ஓகஸ்ட் 6இல் பிரதமர் ரணில் தெரிவுக்குழு முன் சாட்சியம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அடுத்த மாதம் 6ஆம் திகதி சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான இறுதிக்கட்ட சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading