Local

தமிழருக்காக கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்கத் தயார்! – மஹிந்த தெரிவிப்பு

தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது புதிய அரசமைப்பு உருவாவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த,

“தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயார். ஆனால், தமிழ் மக்களுக்கான அரசியலை கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.

தடியை ரணில் விக்கிரமசிங்கவிடம் கொடுத்து, பாம்பு எதுவென்றும் கூட்டமைப்பு காட்டிக்கொடுத்துள்ளது. எனவே, இந்த விடயத்தில் விழிப்பாகவே இருக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading