LocalNorth

வவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் மரணம்!

வுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் பெற்று வந்த கொழும்பு, மருதானையைச் சேர்ந்த கேசவன் சசிகுமார் (வயது – 41) என்பவரே உயிரிழந்தார்.

இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும், இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading