Local

தமிழ் மக்களுக்காக பதவி துறக்கத் தயார்! – அமைச்சர் மனோ உறுதி

“தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துத் தீர்வைப் பெறுவதற்காக இங்குள்ளவர்கள் போராடுவது போன்று அரசுக்குள் இருந்தும் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராகவே இருக்கின்றேன். ஆகவே, ஓர் அரச அமைச்சரான அப்பாவியான என்னைக் குறை கூறாதீர்கள்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்.

தமிழ் மக்களின் கலை, கலாசாரம் பாதுகாக்கப்பட்டு இருப்பைத் தக்க வைப்பதற்குக் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading