Local

அதியுயர் சபையில் அராஜகம்: 20இல் வருகின்றது அறிக்கை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்,.

சபையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading