Local

நாளை நோன்பு நோற்குமாறு முஸ்லிம்களிடம் கோரிக்கை!

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை (25.04.2019)  நோன்பு நோற்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகள் சீராகவும், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சைகள் ஒத்திவைப்பு

நீர்பாசன திணைக்களத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவிருந்த பொறியியலாளர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறவிருந்த குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் திறனாற்றல் பரீட்சையையும் ஒத்திவைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் திணைக்கள பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் அனைத்தும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading