LocalNorth

வெள்ளத்தால் மரத்தில் சிக்கியிருந்தவர்களும் பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர்.

வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய பகுதியில் இருந்து பிறந்து சில நாட்களேயான குழந்தையும், தாயும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading