Local

ரூ. 50 கொடுப்பனவை வழங்க அமைச்சரவையில் தீர்மானம்! – நாடாளுமன்றில் கிரியெல்ல தெரிவிப்பு

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே, பிரதமரின் மத்தியஸ்தத்துடன் அக்கொடுப்பனவு வழங்கப்படும்.”

– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தின்போது மஹிந்த அணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தனவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

ஆனால், எப்போது வழங்கப்படும், நிலுவைத் தொகையுடன் வழங்கப்படுமா போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading