Local

அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வீட்டுக்குச்செல்வேன் – சஜித் சபதம்!

” மக்களுக்கு சேவையாற்ற முடியாவிடின் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, வீட்டுக்குச்செல்வேன்.” – என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு, கொலன்னாவைப் பகுதியில் இன்று ( 24) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”  விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு இனியும் பயணிக்முடியாது. 10 மாதங்களுக்கு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்துதான் பயணிக்கவேண்டும். எஞ்சியுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும்.

நாட்டைக்கட்டியெழுப்பும் வகையில் தீர்மானம் எடுக்கப்படவேண்டும். மக்களுக்காகவே அரச இயந்திரம் செயற்படவேண்டும். எனினும், மக்களுக்கு சேவையாற்ற முடியாமல்போனால், அனைத்தையும் தூக்கிவீசிவிட்டு வீட்டுக்குச்செல்வேன்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அஜித் பி.பெரேரா,

” விரைவில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார்.” என்று குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading