Local

பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைகிறது? நாளை இறுதிகட்டப் பேச்சு!

எரிபொருள்  விலைகள், பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட நிலையில், பஸ் கட்டணங்களைக்  குறைப்பது தொடர்பில், இன்று  திங்கட்கிழமை நிதி அமைச்சில் பேச்சு நடைபெறவுள்ளது.


ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாவினாலும்,  ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவினாலும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல்  குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர், மூன்று  சந்தர்ப்பங்களில் டீசலின் விலை குறைக்கப்பட்டது.  கடந்த மாதம் முதலாம் திகதி டீசல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலை 5 ரூபாவினாலும்,  கடந்த மாதம் 30 ஆம் திகதியும் டீசல் மற்றும் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

இதேவேளை, இன்று  திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், பஸ் கட்டணக்  குறைப்பிற்கான வீதம் தொடர்பில் இணக்கம் எட்டபடலாம் என,  தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

இதுவரை டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிபலனை,  பயணிகளுக்குப்  பெற்றுக்கொடுக்கத்  தயாராகவுள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனியார் பஸ் கட்டணத்தை 5 வீதத்தால் குறைக்க முடியும் என்பதை உறுதியாகக்  கூறமுடியும் என,  தனியார் பஸ் சங்கங்கள்  சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading