Local

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

காலி – மாத்தறை பிரதான வீதிக்கருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.35 மணியளவில், குறித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, கொங்கிறீட் தூணொன்றில் மோதிகொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் திஹகொட மற்றும் கொடபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading