Lead NewsLocal

சமல் ஜனாதிபதி; மஹிந்த பிரதமர்! – எடுத்த முடிவில் மாற்றம் இல்லை எனக் கூறி கோட்டாவுக்கு ஆப்பு வைக்கிறார் வாசுதேவ

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அரசியல்வாதியாக வரத் தயாராக இருந்தால், அவரைச் சூழ மக்கள் சக்தியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தான் நாட்டின் தலைவராக வரத் தயார் என விடுத்துள்ள அறிவிப்பு அர்த்தமற்ற ஒன்று. இவ்வாறானவர்கள் மன்னர்களின் காலங்களிலும் காணப்பட்டுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“19ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரம் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதுடன், பிரதமருக்கு அதிகாரம் அதிகரித்துள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading