Cinema

சமந்தாவின் அதிரடி அறிவிப்பு!

“பத்து வருடங்கள் தாண்டிய பிறகும் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைத்தான் தேர்வு செய்யவேண்டும்.”

– இவ்வாறு பிரபல நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“சினிமாவில் கதை மிகவும் முக்கியம். கதாநாயகிக்கு முக்கியத்துவமளிக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்யவேண்டும். எல்லாத் தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும்.

நான் தற்போது நடித்து வரும் ‘ஓபேபி’ கதை எல்லாத் தரப்பு மக்களுக்கும் பிடித்த வகையில்தான் அமைந்திருக்கின்றது. விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading