Lead NewsLocal

‘லங்கா’ வைத்தியசாலையிலிருந்து தீர்ப்பை வரவேற்கிறார் சம்பந்தன்! – ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்து

உடல்நலக் குறைவால் இன்று காலை கொழும்பிலுள்ள ‘லங்கா’ (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் கலைப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதற்கமைய தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கின்றேன். நாட்டில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ய இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும். எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும். தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை அவர் உடன் நிறுத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் நடவடிக்கைளை அவர் முன்னெடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள அணியினரிடம் அரசாட்சிப் பொறுப்பை அவர் வழங்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading