மாகந்துர மதூஷின் சகாக்களுக்கு வலை! 24 மணிநேரமும் தேடுதல் வேட்டை!!
போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் தொடர்புகளைப் பேணிய மேலும் சில பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின், திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவினரே இச்செயலில் இறங்கியுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளனர் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளன.
மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், பாதாளக் குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளரும் அடங்குகின்றார்.
