Local

கொந்தளிக்கிறது பகைமை – பொன்சேகாவுக்கு ஜனாதிபதி ஆப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்காவுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

இதன்போது சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கட்சி தலைமையின் உத்தரவைமீறி ‘பல்டி’யடித்த இவர்களுக்கு பதவி வழங்கப்படக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொன்சேக்கா உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தான் அமைச்சப் பதவி வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சரத்பொன்சேகா மனநோயாளி என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்ல, மைத்திரியின் கைகளில் பதவியைப் பெறுவது கவலைக்குரிய விடயம் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading