Local

நிதி அமைச்சராக ரவி- சட்டம், ஒழுங்கு பொன்சேகா வசம்! 30 பேர்கொண்ட அமைச்சரவை திங்கள் பதவியேற்பு!!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் புதிய அமைச்சரவை திங்களன்று பதவியேற்கும் என அறியமுடிகின்றது. அமைச்சரவைப் பட்டியலை இறுதிப்படுத்தும் பணிகளில் ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

விசேட அறிவிப்பொன்றை மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமர் பதவியை துறந்த பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை பதவியேற்கவுள்ளார். அதன்பிறகே அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சு.கவின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் தனியாட்சி அமைவதற்குரிய அறிகுறிகளே பிரகாசமாக தென்படுகின்றன.

ஐ.தே.கவின் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு நிதி அமைச்சையும், சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத்பொன்சேகாவிடமும் ஒப்படைக்குமாறு ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading