கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!
கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.
இன்று நள்ளிரவு 12.00 மணிமுதல் நாளை பிற்பகல் 06.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி மொரகொஸ்முல்ல, ராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல – கொஸ்வத்த மற்றும் இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வீதி அபிவிருத்திப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.
