LocalSports

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நேரடி வாய்ப்பை இழந்தது இலங்கை!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ரி – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கின்றது.

இந்தத் தொடருக்கு 10 அணிகள் ஐ.சி.சி., ரி – 20 தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதிபெறும்.

ஆனால், ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளின் பெயரை ஐ.சி.சி. உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 3 ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 4 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 5 ஆவது இடத்தில் இருக்கும் தென்ஆபிரிக்கா, 6 ஆவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7 ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 8ஆவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும்.

தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியில் இருந்து நவம்பர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading