Local

ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று அமுனுபுரவை திருப்பி அழைக்கின்றது இலங்கை இராணுவம்!

மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் 200 இலங்கை இராணுவத்தினரின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றும், லெப்.கேணல் கலன அமுனுபுரவை, ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று திருப்பி அழைத்துக் கொள்வதாக, இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், லெப்.கேணல் கலன அமுனுபுரவை உடனடியாகத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. செயலகம் இலங்கை அரசிடம் கோரியிருந்தது.

“ஐ.நாவின் ஆலோசனைக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் இலங்கை படையினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, மனித உரிமை ஆய்வுக்குட்படுத்தும், செயல்முறை 2017 ஆம் ஆண்டு, .ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, 2016இல், லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலிக்கு அனுப்ப ஐ.நா. இணங்கியிருந்தது.

நான்கு இராணுவ அதிகாரிகளின் பட்டியலில் இருந்து, ஏனைய மூவரையும் நீக்கி விட்டு, ஐ.நாவே லெப்.கேணல் கலன அமுனுபுரவை தெரிவு செய்திருந்தது.

இவரைத் திருப்பி அழைத்துக் கொள்ளும் விடயத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading