Local

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறிதரன் உரை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின் உப குழுக் கூட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உரையாற்றவுள்ளார்.

பசுமை தாயக அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த உப குழுக் கூட்டம், ஜெனிவா வளாகத்திலுள்ள குழு அறையில் இன்று நண்பகல் 12 தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலண்டன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் டிர்ட்றே மர்னோல், சுவிஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யூவிஸ் வோவி, பசுமை தாயகம் அமைப்பின் பிரதிநிதி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் மற்றும் பிரான்ஸ் மனித உரிமைகள் தமிழர் நிலையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி. கிருபாகரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading