Local

கரன்னகொடவை கைதுசெய்ய தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அட்மிரல் வசந்த கரன்னகொட தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு, இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் 14 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பில் முன்னிலையான சட்டவாளர், தமது கட்சிக்காரருக்கு எதிராக அரசசார்பற்ற நிறுவனங்கள் சதி செய்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading