அன்னமே சின்னம்! – அறிவித்தார் சஜித்
“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“என்னிடம் ஒளிவுமறைவு எதுவுமில்லை. சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அதே ‘அன்னம்’ சின்னத்திலேயே நான் போட்டியிடவுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.
