World

10 குழந்தைகள் நரபலி! 65 சூனியக்காரர்கள் கைது!!

பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் ஜனவரி மாதம் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் பாகங்கள் நீக்கப்பட்டு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமய சடங்குகளில் சிறார்களின் உடல் பாகங்களைப் பயன்படுத்தினால் வளம் பெருகும் என்பது தான்சான்யா மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகின்றது.

இதற்காகத்தான் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுவேட்டை நடந்துள்ளது.

” பாரம்பரிய மருத்துவர்கள் உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டும்” என தான்சான்யா உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். கைதான பலரிடம் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading