Local

ஜனாதிபதி இலண்டன் செல்வதால் இன்று கூடுகின்றது அமைச்சரவை!

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இலண்டன் செல்கின்றார்.

தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கியிருப்பார்.

இதனால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டுகின்றார் ஜனாதிபதி.

இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading